மருதானையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி கைதான பெண் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளில் வந்த சாரதியின் நண்பி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்திட்கு பிறகு மோட்டார் சைக்கில் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது நண்பியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்குப் பிறகு இந்த இருவரும் உணவகமொன்றிற்குச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் மருதானை, பஞ்சிகாவத்தை பகுதியில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
