சற்றுமுன் கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள், களனியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களைக் கைது செய்ய கிராண்ட்பாஸ் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
