போலி எண் தகடுடன் சொகுசு காரை செலுத்திய பெண் மருத்துவர் ஒருவரை கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, கண்டி வாரியபொல சுமங்கல மாவத்தையில் வைத்து மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் கணவரும் ஒரு மருத்துவர். மேலும் இக் காரின் உரிமை அவருக்குச் சொந்தமானது. ஆனால், அதிலுள்ள எண் தகடுகள் அவரது சகோதரர்களில் ஒருவருக்கு சொந்தமான காரின் எண் தகடுகள் என்பது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் கண்டி, பேராதனையிலுள்ள வைத்தியசாலையில் பணிபுரிபவர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
