Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

காதலனை கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு.

ஜனவரி 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கேரளாவில் காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மாவட்டமான கன்னியாகுமாரியைச் சேர்ந்த இளம்பெண் கரீஸ்மா. அதேபோல, திருவனந்தபுரம் பாரசாலா பகுதியைச் சேர்ந்தவர் ஷரோன் ராஜ்.

கடந்த 2021-ம் ஆண்டில் முதுநிலை பட்டப்படிப்பு படித்த கரீஸ்மா, இளநிலை 3-ம் ஆண்டு படித்த ஷரோன் ராஜ் என்ற மாணவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து, கரீஸ்மாவுக்கு அவரது பெற்றோர் ராணுவ அதிகாரி மாப்பிள்ளையை நிச்சயம் செய்தனர். அதற்கு அவரும் சம்மதித்தார்.

பின்னர், காதலன் ஷரோன் ராஜ் உடனான தொடர்பை துண்டிக்க வேண்டும் என்று நினைத்த கரீஸ்மா, பல மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்து அவரை கொலை செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளார். ஆனால், அது அவருக்கு பலன் அளிக்கவில்லை.

பின்னர், கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் திகதி ஷரொன் ராஜை வீட்டுக்கு அழைத்த க்ரீஷ்மா, அவருக்கு மூலிகை விஷங்களை கலந்து ஆயூர்வேத பானம் என குடிக்க வைத்தார். பின்னர், வீட்டிற்கு சென்றதும் இரவு பலமுறை ஷரொன் ராஜ் வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சில நாட்களிலே உடல் பாகங்கள் செயல் இழந்து அவர் உயிரிழந்தார்.

பின்னர், அவரது குடும்பம் கரீஸ்மா மீது புகார் அளித்தது. அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் கரீஷ்மா விஷம் கொடுத்தது உறுதியானது.

இதையடுத்து, இந்த வழக்கில் கரீஸ்மா கொலை குற்றவாளி என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று கரீஸ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அப்போது, நீதிபதி தீர்ப்பை வாசிக்க தொடங்கியதும் அழ தொடங்கிய க்ரீஷ்மா, மரண தண்டனையை அறிவிக்கவும் அழுகையை நிறுத்தி மௌனமானார்.

முந்தைய செய்தி மீன்பிடி வலையில் சிக்கிய மனித எலும்புகள்!
அடுத்த செய்தி 30 ஆண்டு கால நம்பிக்கையைக் கொண்டாடும் Maliban Kiri …

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்முதன்மை செய்தி

போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்.

பிப்ரவரி 23, 2025
அண்மைய செய்திகள்உலகம்

தன்னை தானே திருமணம் செய்த இளம் பெண் தற்கொலை

செப்டம்பர் 30, 2024
உலகம்

மியன்மாரின் புதிய ஜானாதிபதியாக மின் ஹலைங் தெரிவு

ஏப்ரல் 10, 2026
உலகம்

மோடிக்கு நைஜீரியா நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருது.

நவம்பர் 18, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?