1992இல் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் Maliban Kiri, இலங்கையின் பால் உற்பத்தித் துறையில் நம்பிக்கைக்குரிய பெயராக விளங்குவதுடன், 30 ஆண்டு காலப் பயணத்தின் குறிப்பிடத்தக்க மைல் கல்லாக அதன் புத்தம் புதிய பொதிகளின் வடிவமைப்பை அண்மையில் வெளியிட்டது.
நவீனகால நுகர்வோ ரின் விருப்பங்களுடன் வர்த்தகக் குறியீட்டின் செழுமைமிக்க பாரம்பரி யத்தை இணைக்கும் சமகால வடிவமைப்பைக் காட்சிப்படுத்தி இம்முக்கிய நிகழ்வைக் கொண்டா டும் நோக்கில் மீள் அறிமுக நிகழ்வொன்று இடம்பெற்றது.
இந்த மூலோபாய நடவடிக்கை Maliban Kiriயின் பாரம்பரியத்தை கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் சந்தை நிலைப்பாட்டை வலுப்படுத்துவதையும் பரந்த வாடிக்கையாளர் தளமொன்றில் அதன் தேவையை விரிவுபடுத்துவதையும் நோக்காகக் கொண்டது.
தாயைப் போன்ற நம்பிக்கை என்ற குறிச்சொல்லுக்குச் சமமான Maliban Kiriதமது பிள்ளைக ளுக்கு மிகச் சிறந்ததையே வழங்கு வதை நோக்காகக் கொண்ட அர்ப்பணிப்புள்ள இலங்கையின் தாய்மாரின் நம்பிக்கையை வென்ற, குணநலனுடன் கூடிய போஷாக்கின் சின்னமாக நீண்டகாலமாக நிலைத் துள்ளது. வர்த்தகக் குறியீட்டின் புதிய பொதியமைப்பு அதன் நீடித்த நம்பிக்கையைப் பெற்ற அடிப்படை விழுமியங்களுக்கு உண்மையாக இருப்பதுடன் புத்தாக்கத்துக்கான அதன் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக் கின்றது.
Maliban Kiri யின் இக் குறிப்பிடத்தக்க மைல் கல் தொடர்பில் Maliban குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான ரவி ஜயவர்தன ‘இந்த மீள் அறிமுகமானது, புதிய தோற்றம் என்பதற்கு அப்பால், தாய்மாரால் நம்பிக்கையை வெல்லக் கூடிய தயாரிப்புகளைத் தயக்கமின்றி வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதி செய்கின்றது. முப்பது வருடங்களுக்கு மேலாக Maliban Kiri குணநலனின் சின்னமாகக் காணப்பட்டதுடன், ஒரு கோப்பை ஆரோக்கியமான தேநீருடன் ஒரு நாளை ஆரம்பிக்கும் இலங்கையின் வழக்கத்துடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. தலைமுறைகள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்றவாறு, எமது படைப்புகள் தொடர்ச்சியாக அதியுயர் தரத்துடனும் பாதுகாப்பு தொடர்பான தரநிலைகளையும் பிரதிபலிக்கும் என்பதை உறுதிப்படுத்தி, இன்று நாம் உற்சாகத்துடன் ஒரு அடியை முன்னெடுத்து வைக்கிறோம்.’ எனக் கருத்துத் தெரிவித்தார்.