கடுகண்ணாவ ரயில் நிலையத்துக்கருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டியிலிருந்து பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயில் மோதியே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
அக்குரஸ்ஸ – கனத்தொட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மன்னார், புதுக்குடியிருப்பு பகுதியிலும் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
