மாதம்பிட்டியில் குப்பையிடுமிடத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவொல்வர் ரக துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கி துருப்பிடித்த நிறத்தில் இருப்பதாகவும் களனி பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதெனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த இடத்தில் துப்பாக்கியை யாரோ வீசிச் சென்றிருக்கலாமென கிராண்ட்பாஸ் பொலிஸார் சந்தேகிப்பதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
