Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டிருப்பது சிலருக்கு அதிசயமாகத் தோன்றுவது ஏன்?

ஆகஸ்ட் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கையில் பிரபு வர்க்கத்தினருக்கு சட்டம் சுதந்திரமாக செயல்படாத சூழல் நீண்டகாலமாக இருந்து வந்ததாகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டிருப்பது சிலருக்கு அதிசயமாகத் தோன்றுவதற்குக் காரணம் அதுவே என்றும் விவசாய,காணி, நீர்ப்பாசன மற்றும் கால்நடை வளத்துறை அமைச்சர் கே. டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த எழுதிய நூல் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து கண்டி கரலிய அரங்கில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்:

அங்கு, மேலும் அமைச்சர் கூறுகையில் :

“முன்னர் நம் நாட்டில் எந்த முன்னாள் ஜனாதிபதியையோ, உயர் அதிகாரியையோ சட்டத்தின் முன் நிறுத்தியதில்லை. அதனால் ரணில் கைது விசேட முக்கியத்துவம் பெறுகிறது. இனி அதிகமானவர்களுக்கு சட்டம் செயல்படுத்தப்படும் போது, இது அதிசயம் அல்ல, வழமையான ஒன்று என்று மக்கள் உணர்வார்கள்.”

பொதுசொத்துகளை தவறாக பயன்படுத்தும் எவருக்கும் பதவியைப் பொருட்படுத்தாமல் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். சட்டத்தை செயல்படுத்துவது அரசு அல்ல; அரசு சட்டங்களை உருவாக்குகிறது. அவற்றை செயல்படுத்துவது சம்பந்தப்பட்ட அமைப்புகளும் அதிகாரிகளுமே. முன்னர் சாதாரண மக்களுக்கு மட்டுமே சட்டம் நடைமுறைக்கு வந்தது; பிரபுவர்க்கத்தினருக்கு பெரியோர்களுக்கு வரவில்லை. இப்போது அனைவருக்கும் சமமாக அமல்படுகிறது.

ரணில் தொடர்பான வழக்கு 26ம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரும். அப்போது அவருக்கு பிணை வழங்கி வழக்கு தொடருமா அல்லது பொதுசொத்து சட்டத்தின் கீழ் பிணை மறுக்கப்பட்டு காவலில் வைத்து விசாரிக்கப்படுமா என்பது குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கும்.

நீதிமன்ற தீர்ப்பு முன்கூட்டியே எழுதப்பட்டதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். இது நீதிமன்ற அவமதிப்பாகும்; சட்டம் அதற்கும் நடவடிக்கை எடுக்கலாம் . சட்டத்தின் ஆட்சியில் நடைபெறும் நடவடிக்கைகளில் அரசியல் விருப்பங்களுக்கு இடமில்லை.பொறுப்புள்ள குடிமக்களாக ஒவ்வொருவரின் பேச்சுக்களும் கதைகளும் அமைய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

முந்தைய செய்தி ரஷ்ய அணுமின் நிலையத்தை குறிவைத்து தாக்குதல்!
அடுத்த செய்தி பொரலஸ்கமுவ துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி மீட்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் இரு வேறு குற்றச்சாட்டில் கைதான நால்வர்

அக்டோபர் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் மாவட்ட செயலர் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்

ஜூன் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நீதியை நிலைநாட்டினால் அமெரிக்க அதிபருக்கு நோபல் பரிசு

ஜூலை 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எரிசக்தி அமைச்சர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை

மார்ச் 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?