Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழ் . கோட்டை மற்றும் சங்கிலியன் பூங்காவை அழகுபடுத்த திட்டம்

ஜனவரி 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் நல்லூர் சங்கிலியன் பூங்கா என்பனவற்றை அழகுபடுத்தும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் கோட்டையை பல்வேறு பரிணாமங்களில் அழகுபடுத்தி எதிர்காலத்தில் அதன் ஊடாக வருமானம் மீட்டும் பொறிமுறைக்கு ஏற்றவாறு நகர அபிவிருத்தி அதிகார சபையால், தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கான நிதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் இந்தத் திட்டத்தை எப்படி முன்னெடுக்கலாம் என்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இந்த மாதம் யாழ்ப்பாணம் வருகைதரும்போது இது தொடர்பில் இறுதி முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை, கோட்டையைச் சுற்றியுள்ள அதன் எல்லைப் பகுதியை அடையாளப்படுத்தி வாகனங்கள் உள்நுழையமுடியாதவாறு மதில்கள் அமைக்கப்படுவதுடன், 5 நுழைவாயில்கள் ஊடாக மாத்திரமே உள்நுழைய அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் தொல்பொருள் திணைக்களத்தினரால் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் சங்கிலியன் பூங்காவை அழகுபடுத்தி சிறுவர்களுக்கான பூங்காவாக அமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக மேற்கொள்வதற்கு கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலர், யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலர்கள், யாழ். மாநகர சபை ஆணையாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், தொல்பொருள் திணைக்களத்தினர் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் – அந்த எண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாதீர்கள் – நா.வேதநாயகன்
அடுத்த செய்தி முல்லைத்தீவு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தொடரப்பட்ட வழக்கு – மீண்டும் தவணைக்கு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் ஆரம்பம்

மார்ச் 20, 2026
இலங்கை

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய தீர்த்த திருவிழா

செப்டம்பர் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

14 வயது சிறுமியிடம் பாலியல் வேட்டை புரிந்த இராணுவ சிப்பாய் கைது

ஏப்ரல் 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அனுராதபுர போதனா வைத்தியசாலை பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவு பெற்றது ……

மார்ச் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?