கொழும்பு மாதம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போதி சந்தி பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் வீதியை சுத்தம் செய்துகொண்டிருந்த போது திடீரென அவர் மீது மரக்கிளை முறிந்து விழுந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த அப் பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்குளியைச் சேர்ந்த 60 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
