இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பல இயற்கை அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன .
இந்நிலையில் மியன்மார் இந்திய எல்லை பகுதியில் 5.6 ரிக்டர் அளவுக்கோளில் நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நில அதிர்வானது 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதுடன் சேத விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
