தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனை மாவட்ட செயலக அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இவர்களுடன் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் இ.சசீலன் உடனிருந்தார்.
இச் சந்திப்பில் சுமூகமாக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் தொடர்பாகவும் ஆணையாளர் நாயகம் கேட்டறிந்து கொண்டார்.
