Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை சிறையிலுள்ள பாம்பன் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

மே 22, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

இலங்கைச் சிறையில் உள்ள பாம்பன் விசைப்படகு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் இன்று(22) பாம்பன் பாலம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி இலங்கை மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு படகையும் அதிலிருந்த கபில் ரோச்சர், ஆண்டனி, அந்தோணி அஜித், பிரின்ஸ், பெரிய கருப்பன், அகர்சன் உள்ளிட்ட 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து நீர்கொழும்பு மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 12 பேரும் தொடர்ந்து ஏழாவது முறையாக நீதிமன்ற காவலில் நீடிக்கப்டடு 90 நாட்களுக்கு மேலாக விசாரணை கைதிகளாக இருப்பதால் மீனவர்களின் வழக்கை துரிதமாக நடத்தி விரைந்து மீனவர்களையும் படகையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் பாம்பன் பாலத்திற்கு முன் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் செல்லும் பிரதான சாலையில் மீனவ குடும்பத்தினர், மீனவ பிரதிநிதிகள், மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராமநாதபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பாம்பன் சாலை பாலத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

தமிழக அமைச்சரவையில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த தூத்துக்குடி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் மீன்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு மீனவர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளை பிரதமரை சந்திக்கும் தமிழக முதல்வர் விஜய் மீனவர்கள் விடுதலை குறித்து பிரதமரிடம் பேசி நல்ல முடிவை பெற்று தர வேண்டும்.

காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தையால் மீனவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், 27ஆம் தேதி மீனவர்களின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி யாழ்ப்பாண உணவகம் ஒன்றிற்கு சீல் வைக்க உத்தரவு
அடுத்த செய்தி மன்னார் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மணல் விநியோகம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். போதைப்பொருளுடன் கைதான இளைஞனை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்று அனுமதி.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்பு

ஆகஸ்ட் 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு

ஜூலை 26, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி….

மே 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?