மும்பையில் பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிப்பதற்கு அந்நாட்டு நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்துள்ளது.
புறாக்களின் எச்சங்களால் ஏற்படக்கூடிய நோய்களைத் தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் விலங்கு பிரியர்களும் மத ஆர்வலர்களும் இதற்குக் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் நீதிமன்றத்தின் குறித்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, காலவரையற்ற உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகப் பலரும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
இதேவேளை இந்த விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 15 பேரை அந்நாட்டுக் காவல்துறை கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
