ரஷ்யப் படைகள் நேற்று உக்ரைனின் கிழக்குப் பகுதியில் திடீரென்று முன்னேறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனின் டோப்ரோபில்லியா எனும் நகரத்துக்கு அருகில் ரஷ்யப் படைகள் செல்வதை உக்ரைனின் உத்தியோகபூர்வ டீப்ஸ்டேட் இணைய வரைபடம் காட்டுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் அலஸ்காவில் வெள்ளிக்கிழமை சந்திக்கவிருக்கும் வேளையில் இத்தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் டொனெட்ஸ்க் வட்டாரத்தை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் ரஷ்யப் படைகள் 10 கிலோமீற்றர் வரை முன்னேறியதை வரைபடம் காட்டுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாஸ்கோ உடனடியாகக் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
