மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைச்சோலை பிரதேசத்தில் போயா தினமான நேற்று வெள்ளிக்கிழமை (08) சட்டவிரோதமாக அரச மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் வியாபரி ஒருவரை 60 கல் போத்தல்கள் கொண்ட மதுபான போத்தல்களுடன் கைது செய்ததுடன் 4490 ரூபா பணத்தை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று பகல் குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றை பெரும் கற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.ஜி.எஸ். சஞ்ஜீவ தலைமையிலான பொலிசார் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர்.
இதன்போது அரச மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த பெண் ஒருவரை கைது செய்ததுடன் கால் போத்தல்கள் கொண்ட 60 மதுபான போத்தல்களையும் 4490 பணத்தை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
