Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மட்டு களுவாஞ்சிகுடியில் அடகுவைத்த நகைகளை மீட்கச் சென்றவரை தாக்க முயன்ற தனியார் நிதி நிறுவன உத்தியோகத்தர்.

ஜனவரி 6, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகுவைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக அங்கு சென்ற நபரை நோக்கி அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்து அவரை தாக்குவதற்கு முற்பட்டதாக பாதிக்கப்பட்டவர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரியவருவதாவது

குறித்த பிரதேசத்திலுள்ள நபர் ஒருபர் தனது பணத்தேவைக்காக க களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 19 இலட்சம் ரூபாவுக்கு தங்க ஆபரணங்களை அடகு வைத்திருந்தார்.

இதனையடுத்து குறித்த நிதி நிறுவனத்தில் அடகுவைத்த தனது நகைகளை மீட்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (03) பிற்பகல் பணத்துடன் அந்நிறுவனத்துக்குச் சென்று செலுத்தவேண்டிய முதல் அதற்கான வட்டி தொடர்பில் கணக்குப் பார்த்தபோது, செலுத்தவேண்டிய மொத்தத் தொகை 20 இலட்சம் ரூபா என நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

அதனை தொடர்ந்து அந்த நபர், தான் 20 இலட்சம் ரூபா பணம் கொண்டு வந்துள்ளதாகவும் உடன் அதனை செலுத்துவதாகவும் நகைகளை தருமாறு கேட்டதையடுத்து அங்கு கடமையாற்றியவர் ஏன் அவசரமாக மீட்கப் போகின்றீர்கள். இன்னும் இரு நாட்களுக்கு இருக்கட்டும். திங்கட்கிழமை தருகின்றோம். இப்போது உங்களது நகைகளை தரமுடியாது என கூறியுள்ளார்.

அதற்கு நகை அடகுவைத்த நபர், தனக்கு அவசரமாக நகைகள் தேவை என கூறி நகைகளை கேட்டுள்ளார். அதற்கு நிறுவனத்தினர் நகைகளை கொடுக்க மறுத்துள்ளதையடுத்து அந்த நபர் வீட்டுக்குத் திரும்பிய பின்னர் சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின்னர் மீண்டும் சென்று அடகுவைத்த ஆபரணங்களை கேட்டுள்ளார்.

அப்போது அங்கு கடமை புரியும் உத்தியோகத்தர் ஒருவர் நகைகளை பெறச் சென்ற நபரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அவரை தாக்கவும் முற்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்ட நபர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனக்கு குறித்த நிதி நிறுவனத்தால் நடந்த அநீதி தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த நிதி நிறுவனத்தில் கடமையாற்றும் குறித்த உத்தியோகத்தர்கள் தன்னிடம் மாத்திரமின்றி, இன்னும் பலரிடம் இதேபோன்று அத்துமீறி நடந்து கொண்டதாகவும் வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை இன்னும் சில நாட்கள் நிறுவனத்தில் வைத்திருந்தால் செலுத்தவேண்டிய வட்டிப் பணத்தொகை அதிகரிக்கும் என்ற நோக்கத்திலேயே நிறுவனத்தினர் நகைகளை திருப்பிக் கொடுக்க தாமதிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்..

இதேவேளை வாழைச்சேனை, கிரான், போன்ற பிரதேசங்களிலுள்ள சில நிதி நிறுவனங்களில் தமது பண தேவைக்காக அடைவு வைத்த தங்க நகைகளை மீட்பதற்கு சென்றால் உடனடியாக அடைவுகளை வழங்காது இழுத்தடித்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

 

 

முந்தைய செய்தி அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி யாழில் போராட்டம்.
அடுத்த செய்தி வாழைச்சேனையில் போதை பொருள் வியாபரிகள் நால்வர் கைது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கம்பளை தொழிற்சாலையில் தீப்பரவல்

ஜூலை 28, 2025
இலங்கை

தேசிய யூடோ போட்டியில் துணுக்காய் தேறாங்கண்டல் அ. த. க. பாடசாலை வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை!

செப்டம்பர் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் இன்றைய தினம் இடம்பெற்ற இளைஞர் கழக அங்குரார்ப்பன நிகழ்வு!

ஜூன் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலை பொலிஸாரால் அகற்றப்பட்ட தியாகதீபம் திலீபனின் உருவப்படம்!

செப்டம்பர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?