அவுஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மழைக் காடுகளில், கோல்ஃப் பந்து எடையுள்ள ஒருவகை குச்சிப் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்ரோபில்லா அல்டா என விலங்கியல் பெயர் கொண்ட பூச்சி, அவுஸ்திரேலியாவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட பூச்சிகளிலேயே மிகவும் கனமானது என கூறப்படுகிறது.
44 கிராம் எடையும், 40 சென்றிமீற்றர் நீளமும் கொண்ட சிறகுகளுடன் கூடிய இந்தப் பூச்சி, குயின்ஸ்லாந்தின் மலைப் பகுதியில் உள்ள மழைக் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவுஸ்திரேலியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தொடர் ஆய்வுக்காக குயின்ஸ்லாந்து அருங்காட்சியத்தில் பூச்சிகளின் இரு மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
