Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

உலக சுகாதார நிறுவனம் அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது!

ஜூலை 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உலக சுகாதார நிறுவனம் (WHO) சிக்குன்குனியா எனும் நுளம்பு மூலம் பரவும் வைரஸ் பற்றிய அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு முன் உலகமெங்கும் பரவிய இதே வைரஸ், தற்போது மீண்டும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலிருந்து ஐரோப்பா உள்ளிட்ட ஏனைய கண்டங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ அதிகாரி டயானா ரோஹாஸ் ஆல்வரஸ் கூறுகையில்,

உலகம் முழுவதும் 119 நாடுகளில் வசிக்கும் சுமார் 5.6 பில்லியன் பேர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கின்றனர்.

“2004-2005 ஆம் ஆண்டுகளில் உலகம் தாண்டிய பரவல் ஏற்பட்டது. அதே நிலை மீண்டும் ஏற்படுகிறது,” என அவர் தெரிவித்துள்ளார். அந்த காலத்தில் சிறிய தீவுகள் முதலில் பாதிக்கப்பட்டு பின்னர் உலகம் முழுவதும் பரவியது.

2025 இன் தொடக்கத்தில் இந்த புதிய பரவல் இந்தியப் பெருங்கடல் தீவுகளான ரீயூனியன், மயோட்டே மற்றும் மொரிஷியஸ் போன்ற இடங்களில் பெரும் அளவில் பரவத் தொடங்கியது.

ரீயூனியனில் மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதி ஏற்கனவே வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது மடகாஸ்கர், சோமாலியா, கென்யா, மற்றும் தெற்காசிய (இலங்கை உட்பட) போன்ற நாடுகளிலும் பரவல் தொடங்கியுள்ளது.

தென் பிரான்ஸ் பகுதிகளில், 12 இடங்களில் உள்ளூர் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எந்த நாட்டுக்கும் பயணம் செய்யாமல், உள்ளூர் நுளம்புகளால் தொற்றுக்குள்ளாகி உள்ளனர். இத்தாலியிலும் சமீபத்தில் ஒரு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி செம்மணியில் கடந்த மூன்று நாட்களில் 20 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன!(video )
அடுத்த செய்தி Meta AI அறிமுகம் செய்துள்ள புதிய அம்சம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

மெக்சிக்கோவில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

ஆகஸ்ட் 31, 2025
உலகம்

காசாவின் இனப்படுகொலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

செப்டம்பர் 16, 2025
உலகம்

விளையாடும் போது திடீர் மயக்கம் ஏற்பட்டு மாரடைப்பால் உயிரிழந்த 3 ஆம் வகுப்பு மாணவி-இந்தியாவில் சம்பவம்.

செப்டம்பர் 16, 2024
அண்மைய செய்திகள்உலகம்

பாப்பரசரின் இறுதிச் சடங்கை அறிவித்த வத்திக்கான்…

ஏப்ரல் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?