ரெட்ரோ படத்தையடுத்து, நடிகர் சூர்யா தனது 45-வது படமான ‘கருப்பு’ திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தின் டீசர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சூர்யா கருப்பு சட்டை அணிந்த புகைப்படத்துடன், டீசர் வெளியீடு நாளை காலை 10 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த மாற்றம், எதிர்பார்ப்பில் இருந்த சூர்யா ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரிஷா, யோகி பாபு, இந்திரன்ஸ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில், சூர்யா ஒரு சட்டதரணி கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றாரென்பது குறிப்பிடத்தக்கது.
