புத்தளம் – கற்பிட்டி பகுதியில் பெருந்தொகை போதை மாத்திரைகளுடன் ஐந்து பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 13 இலட்சத்து 49, 640 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளனர்.
18 பொதிகளில் அடைக்கப்பட்ட குறித்த போதை போதை மாத்திரைகள் டிங்கி படகொன்றின் ஊடாக நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரும்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, புத்தளம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
