Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மாணவர்களிடையே ஸ்மார்ட் போன் பாவனையை தடை செய்ய கோரிக்கை

ஜூலை 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாடசாலை செல்லும் மாணவர்களிடையே ஸ்மார்ட் போன் பாவனையை தடை செய்ய வேண்டும் எனக்கோரி வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந் நாட்டில் தற்பொழுது புகைப்பொருள் பாவனை குறைவடைந்து இருப்பதை காணக் கூடியதாகவுள்ளது. ஆனால் போதைப்பொருள் பாவனை அதிகரித்து செல்வதை காணக் கூடியதாகவுள்ளது.

இதனை கட்டுப்படத்துவதற்கு நாம் பாடசாலை மட்டத்திலும் கிராமங்களிலும் செயற்பட்டு வருகின்றோம். ஆனால் போதைப் பாவனை குறைவடைவதை காணக் கூடியதாக தெரியவில்லை. இதனால் கூடுதலாக பாதிப்படைவது இளம் சந்ததியினர், குறிப்பாக மாணவர் சமுதாயம் ஆகும்.

மேலும் இப்படி இருக்கும் பொழுது ஒரு படி மேலாக தற்பொழுது மாணவர்களிடையே ஸ்மார்ட் போன் பாவனையும் காணக் கூடியதாக உள்ளது. இந்த பாவனையை பாடசாலை மாணவர்கள் மட்டில் கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தாங்கள் சிறிலங்காவை துப்பரவு செய்ய முன் வந்ததை மனதார பாராட்டுகின்றோம். இதனைப் போல் ஸ்மார்ட் போன் பாவனையை மாணவர்களிடையே துப்பரவு செய்ய வேண்டும். அதற்கான சில ஆலோசனைகளை முன்வைக்கின்றோம்.

அவையாவன :-

1.பொது இடங்களில் புகைப்பொருள் பாவித்தால் தண்டிக்கப்படுகின்றார்களோ அதே போல் பாடசாலை செல்லும் மாணவர்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் ஸ்மார்ட் போன் பொது இடங்களில் பாவித்தால் தண்டிக்கப்பட வேண்டும்.

2. குறிப்பிட்ட மாணவர்கள் வீட்டில் ஸ்மார்ட் போன் பாவிப்பதனை கண்டால் மாணவர்களின் பெற்றோர்களை தண்டிக்க வேண்டும்.

3. பிரத்தியேக வகுப்பு நடாத்தும் ஆசிரியர்கள் போன் மூலம் வகுப்பு எடுத்தால் அந்த ஆசிரியரை தண்டிக்க வேண்டும்.

போன் பாவனையை மாணவர்களிடையே தடை செய்ய வேண்டும் இதற்கு காரணம் பெற்றோருக்கு தெரிந்த விடயங்கள் எல்லாம் இந்த போன் மூலம் மாணவர்கள் அறிகின்றார்கள். ஆகவே போன் பாவனையை தடை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மன்னாரில் தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடிய பஃவ்ரல் அமைப்பு
அடுத்த செய்தி கனடா அனுப்புவதாக பணம் வாங்கி ஏமாற்றிய முகவர் – யாழில். குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

“யாழ்ப்பாணம்” என்பது விட்டுக் கொடுக்கப்பட முடியாதது – சீ.வீ.கே.சிவஞானம்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை!

டிசம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வட்டுக்கோட்டை சிறுமி துஸ்பிரயோகம்…

ஏப்ரல் 27, 2025
இலங்கை

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலைக்கு நீதி வேண்டி ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?