மியன்மார் எல்லையில் உள்ள உல்பா முகாம்கள் மீது இந்திய இராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து உல்பா அமைப்பு இன்று வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், பல நடமாடும் முகாம்களில் அதிகாலையில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தடைசெய்யப்பட்ட அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் தாக்குதல்களில் கொல்லப்பட்டார்.
மேலும் சுமார் 19 பேர் காயமடைந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற சம்பவம் நடந்ததாக எந்தத் தகவலும் இல்லை என்று இந்திய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் பி.டி.ஐ.யிடம் தெரிவித்தார்.
இந்திய இராணுவத்திடம் இதுபோன்ற நடவடிக்கை குறித்து எந்த தகவலும் இல்லை என்று லெப்டினன்ட் கேணல் மகேந்திர ராவத் கூறினார். கடந்த 35 ஆண்டுகளாக தடைசெய்யப்பட்ட அமைப்பான அசோம் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா), மியன்மாரை தளமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
