யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டமொன்று இன்றுமேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று மாலை ஆறு மணி வரை இப்போராட்டம் இடம்பெறும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்தோடு நடைபெறும் இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன். சமத்துவக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார். சட்டத்தரணி காண்டீபன், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
