Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் வீதி விபத்து தொடர்பான விசேட செயலமர்வு!

நவம்பர் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

விபத்தில் காயமடைந்தவரை உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதியுங்கள். அதனால் எந்த விதமான சட்ட ரீதியான பிரச்சனைகளையும் எதிர்கொள்ள தேவையில்லை என சாவகச்சேரி பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மருத்துவச் சபையுடன் இணைந்து வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையானது, வடக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வுச் செயலமர்வை வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகக் கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடாத்தியது.

குறித்த செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

‘விபத்துக்கள் நடந்தவுடன் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லாது பலர் பொலிஸ் வரும்வரை காத்திருக்கிறார்கள்.

நீங்கள் விபத்து நடந்த இடத்தைச் சரியாக அடையாளப்படுத்திவிட்டு, அதனை உங்கள் தொலைபேசியில் புகைப்படம் எடுத்துவிட்டுக் காயமடைந்தவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லலாம். அதனால் சட்டரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லை’ எனத் தெரிவித்தார்.

அதேவேளை குறித்த செயலமர்வில் வளவாளராக கலந்து கொண்ட யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரியுமான பேராசிரியர் உருத்திரபசுபதி மயூரதன் கருத்து தெரிவிக்கையில்,

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உடற்கூற்றுப் பரிசோதனை செய்வது குறித்து உறவினர்கள் பலர் எம்மிடம் கேள்வி எழுப்புகிறார்கள்.

இப் பரிசோனையை நாங்கள் சட்டத்தின் தேவை கருதி மட்டுமே செய்கின்றோம். பொலிஸ் தரப்பின் சட்டரீதியான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான தேவைப்படுவதால்தான் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

உடற்கூற்றுப் பரிசோதனையினைச் செய்யுமாறு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி அல்லது நீதிபதி உத்தரவிடுவார் அதன் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்தார்.

முந்தைய செய்தி நியூ பிரன்சுவிக்கில் மகளிர் ஹாக்கி லீக் – ஆறு அணிகளுடன் போட்டிகள் ஆரம்பம்!
அடுத்த செய்தி வவுனியாவில் பயனாளிகளிடம் புதிய வீடுகளை கையளித்த பிரதி அமைச்சர்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

அருச்சுனா எம்.பிக்கு அழைப்பு கட்டளை.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யுத்தத்தால் வீடுகளை இழந்தோருக்கு 2028 டிசம்பருக்குள் நிரந்தர வீடுகள் – அமைச்சர் அறிவிப்பு!

நவம்பர் 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மணற்காடு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த மனிதவுரிமை ஆணைக்குழு

மார்ச் 24, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

35,000 வீரர்கள் பங்குபெறும் மொன்றியல் மராத்தான்:பல வீதிகள் மூடல்!

அக்டோபர் 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?