இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள Marathon Beneva de Montréal போட்டியில் சுமார் 35,000 ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்து கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வு அக்டோபர் 9 முதல் 11 வரை நடைபெறவுள்ளதாக Montréal நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வார இறுதியில் Montréal நகரின் பல பகுதிகளில் வீதி மூடல்கள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் பயணம் செய்யும் மக்கள், குறிப்பாக downtown மற்றும் marathon பாதையைச் சுற்றியுள்ள பகுதிகளில், முன்கூட்டியே தங்களது பயணத்தைத் திட்டமிடுவது பொருத்தமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

