மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (27.11.2026) உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்படவுள்ளன.
துயிலுமில்லங்கள், இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள துயிலுமில்லங்களுக்கு அருகிலுள்ள காணிகள், மாவீரர் நினைவாலயங்கள், யாழ். பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மற்றும் புலம்பெயர் தேசங்கள் எனப் பல்வேறு இடங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் எழுச்சிபூர்வமாக நடைபெறவுள்ளன.
அந்த வகையில், இன்று மாலை 6.05 மணிக்கு மணியோசை ஒலிக்கப்பட்டு, 6.06 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 6.07 மணிக்கு பிரதான ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
