வல்வெட்டித்துறை நகரசபை கட்டடத் தொகுதி மரக்கறி சந்தைக்கு மேல் மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் அழைத்து மதிப்பளிக்கப்பட்டிருந்தனர்.
முன்னதாக வல்வெட்டித்துறை பேருந்து நிலையத்தில் இருந்து மாவீரர் பொதுத்திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து சுடரேற்றியதை தொடர்ந்து மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மங்கல வாத்திய மரியாதையுடன் ஊர்வலமாக நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து மாவீரர் மேஜர் அலையழகியின் தந்தை சுந்தரலிங்கம் ஈகைச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து மாவீரர் பெற்றோர் உரித்துடையோரால் மாவீரர் நினைவு ஈகைச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. தொடர்ந்து மலர் வணக்கம் செய்யப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றது.
