Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக்கில் 75 மீற்றர் தொலைத்தொடர்பு கோபுரம் – மக்களின் எதிர்ப்பையும் மீறி அனுமதி

நவம்பர் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் உள்ள லோரென்ஷியன்ஸ் (Laurentians) பிராந்தியத்தில் 75 மீற்றர் உயரமான தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்றை அமைப்பதற்கு ‘பெல்’ (Bell) நிறுவனத்திற்கு பிரெவோஸ்ட் (Prévost) நகர சபை உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.

இந்தக் கோபுரமானது, தமது நகரின் இயற்கை அழகை சீரழிக்கும் எனத் தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், இதற்கு எதிரான தமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் இத்திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரெவோஸ்ட் மற்றும் அயல் நகரமான செயின்ட்-ஆன்-டெஸ்-லாக்ஸ் (Sainte-Anne-des-Lacs) ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குடிமக்கள் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.

இந்தக் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்காக நகராட்சிக்குச் சொந்தமான காணியை ‘பெல்’ நிறுவனத்திற்குக் குத்தகைக்கு விடவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது என வலியுறுத்தி 1,500-க்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்ட மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.

மேலும், குடியிருப்புப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வர்த்தக அல்லது கைத்தொழில் வலயத்திற்கு இக்கோபுரத்தை மாற்றுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், மக்களின் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டு, கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற நகர சபைக் கூட்டத்தில், இத்திட்டத்திற்கு ஆதரவாக ஆட்சேபனை இல்லாத தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், இத்திட்டத்திற்கு எதிராகத் தமது குரலைத் தொடர்ந்து எழுப்பப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ள கியூபெக் முதல்வர்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பீப்பாய்!

நவம்பர் 6, 2026
கியூபெக்

மொன்றியல் மாநகரத்தின் அடிப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது – சோரயா மார்டினெஸ் ஃபெர்ராடா

மார்ச் 21, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மேகன் பெல்லின் இறப்பிற்கு நீதி கேட்கும் பெற்றோர்!

ஜூன் 29, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் 200 சதவீதத்திற்கும் அதிகமான நெரிசல்!

நவம்பர் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?