கனடா பிரதமர் மார்க் கார்னியை கொலை செய்வதாக இணையத்தளத்தில் மிரட்டல் விடுத்த கல்கரியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஒருவர், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜேமி டகோஸ்டா (Jamie Dacosta) என்ற குறித்த நபர், பிரதமரைக் கொலை செய்வதாக மிரட்டிய குற்றச்சாட்டு உள்ளிட்ட மேலும் சில குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம், YouTube தளத்தில் பிரதமருக்கு எதிராக விடுக்கப்பட்ட மிரட்டல் தொடர்பில் கனடாவின் மத்திய பொலிஸான RCMP-யின் தேசிய பாதுகாப்புப் பிரிவினர் தகவல் அறிந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஒலிபரப்பப்பட்ட அவரது YouTube பதிவில், ஒட்டாவாவுக்குச் செல்லப்போவதாகவும், எரிபொருளுக்கான பணம் இல்லாதவர்களுக்கு அதற்கான உதவியை யாரோ வழங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், பிரதமரின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து துப்பாக்கியைப் பயன்படுத்தப் போவதாகவும் அவர் மிரட்டல் விடுத்திருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கனடாவின் பிரதமருக்கு எதிராக இணையத்தில் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
