கியூபெக்கின் கோட்டோ-டு-லாக் (Coteau-du-Lac) நகருக்கு அருகிலுள்ள 20ஆம் இலக்க நெடுஞ்சாலையில் (Highway 20) இரண்டு பாரவூர்திகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு சாரதிகள் காயமடைந்துள்ளனர்.
காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தைத் தொடர்ந்து, குறித்த நெடுஞ்சாலையின் மூன்று கிலோமீற்றர் தூரப் பகுதி பல மணி நேரமாக மூடப்பட்டது.
மேற்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பாரவூர்தியொன்று தனது பாதையிலிருந்து விலகி, நடுவிலுள்ள சாலைத் தடுப்பைத் தாண்டிச் சென்று, கிழக்கு நோக்கிப் பயணித்த மற்றுமொரு பாரவூர்தியுடன் (tractor-trailer) மோதியதாக காவல்துறைப் பேச்சாளர் ஆட்ரி-ஆன் பிலோடோ (Audrey-Anne Bilodeau) தெரிவித்தார்.
பாதை மாறிச் சென்ற பாரவூர்தியைச் செலுத்திய 60 வயது மதிக்கத்தக்க ஆண் சாரதி விபத்தில் காயமடைந்த போதிலும், சுயநினைவுடன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக பிலோடோ குறிப்பிட்டார்.
அதேவேளை, கிழக்கு நோக்கிச் சென்ற பாரவூர்தியின் சாரதி அறைக் கதவுப் பகுதியில் மோதல் ஏற்பட்டதால், அதன் சாரதி ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து பாரவூர்தியின் உள்ளே சிக்கிக்கொண்ட குறித்த சாரதியை மீட்பதற்கு விசேட மீட்பு உபகரணங்கள் (jaws of life) பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
