Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

‘பில் 21’ சட்டம்: நவம்பர் 27ஆம் திகதி தீர்ப்பு!

நவம்பர் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் மதச்சார்பின்மைச் சட்டமான ‘பில் 21’ தொடர்பாக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த தீர்ப்பை, நாட்டின் உச்ச நீதிமன்றம் எதிர்வரும் 27ஆம் திகதி வழங்கவுள்ளது.

கியூபெக் அரசாங்கம் அரசியலமைப்பின் ‘நொட்-வித்ஸ்டாண்டிங்’ எனப்படும் விதிவிலக்குச் சரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தியமை தொடர்பாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப் பதவிகளில் உள்ள சில அரச ஊழியர்கள் மத அடையாளங்களை அணிவதற்குத் தடை விதிக்கும் வகையிலும், அரச சேவைகளை வழங்குவோர் அல்லது பெறுவோர் தமது முகத்தைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும் வகையிலும் 2019ஆம் ஆண்டில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அன்றைய பிரான்சுவா லெகோ (François Legault) தலைமையிலான ‘கோலிஷன் அவெனிர் கியூபெக்’ (CAQ) அரசாங்கம், கியூபெக்கில் நீண்டகாலமாக நிலவி வந்த ‘நியாயமான அனுசரிப்புகள்’ (reasonable accommodations) தொடர்பான விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

கனடா அரசியலமைப்புச் சாசனத்தின் உரிமைகள் பட்டியலிலிருந்து இந்தச் சட்டத்தை விலக்கிப் பாதுகாப்பதற்காக, முன்னாள் அரசாங்கம் ‘நொட்வித்ஸ்டாண்டிங்’ சரத்தைப் பயன்படுத்தியது.

இந்தச் சட்டம் தொடர்பான சவால்களுக்கு எதிராக 2024ஆம் ஆண்டு பெப்ரவரியில் கியூபெக் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ‘பில் 21’ சட்டத்தை உறுதி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம், முன்னெச்சரிக்கையாக ‘நொத்வித்ஸ்டாண்டிங்’ சரத்தைப் பயன்படுத்துவதற்குக் கியூபெக்கிற்கு உரிமை உள்ளதெனத் தெரிவித்தது.

எனினும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தமது கடமைகளை நிறைவேற்றும்போது தமது முகத்தை வெளிப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்ற சட்டப் பிரிவை மட்டும் அது செயலிழக்கச் செய்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, ஏனைய மாகாணங்கள் அரசியலமைப்பின் இந்த விதிவிலக்குச் சரத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

முந்தைய செய்தி ஸ்டார்லிங்க் தேவையைக் குறைக்கும் கனடா!
அடுத்த செய்தி கியூபெக்கில் பாரவூர்திகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் பேருந்துடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து – இளைஞர் பலி

அக்டோபர் 5, 2026
கியூபெக்

மொன்றியல் சாரதிகளுக்கு எச்சரிக்கை – பள்ளிப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரம்!

செப்டம்பர் 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மாகாண சபை தேர்தல் தொடர்பான ரில்வின் வெளியிட்ட கருத்து – தேர்தலை முடக்கும் சதி

மே 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – அமைச்சர் குழு நேரில் ஆராய்வு

ஏப்ரல் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?