Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

9 நாட்களில் ரூ.85 கோடி வசூல் செய்த சீன்!

நவம்பர் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 6-ஆம் தேதி உலகளவில் வெளியான நடிகர் சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம், திரையரங்குகளில் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது.

இந்நிலையில், படம் வெளியாகி ஒன்பது நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் இந்திய ரூபாய் 85 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் இப்படம் ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்து தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதன் மூலம் இந்த ஆண்டில் ‘கருப்பு’ மற்றும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தனது தொடர்ச்சியான வெற்றிகளைப் பதிவு செய்து வருகிறார்.

இதர மாநிலங்களைப் பொறுத்தவரை, கேரளாவில் சுமார் ரூ.24.50 கோடியும், ஆந்திராவில் ரூ.25 கோடியும், கர்நாடகாவில் ரூ.14 கோடியும் வசூலித்து இப்படம் பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சென்னையின் முக்கியத் திரையரங்குகளில் ரிலீசின் போது ரசிகர்கள் கொண்டாடியதுடன், இரண்டாவது வார இறுதி நாளிலும் குடும்பங்கள் மற்றும் இளைஞர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

மேலும், படத்தின் திரையரங்கு டிஜிட்டல் உரிமம் சுமார் ரூ.88 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தியேட்டர்களில் நிலவும் முன்பதிவு வேகத்தைக் பார்க்கும் போது, இந்த வார இறுதிக்குள் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடி கிளப்பில் இணையும் எனச் சினிமா வர்த்தக நிபுணர்கள் கணிக்கின்றனர்.

முந்தைய செய்தி காவல் மரணங்கள் குறித்து டி.டி.வி. தினகரன் கண்டனம்!
அடுத்த செய்தி இசைஞானியின் இசையில் மராட்டிய திரைப்படம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

டேர் டெவில் திரைப்படத்தில் இணையும் கயாடு லோஹர்

அக்டோபர் 25, 2026
சினிமா

‘டோரதி’ திரைப்படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு!

அக்டோபர் 1, 2026
சினிமா

நவம்பரில் வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

அக்டோபர் 17, 2026
சினிமா

சாய் அபயங்கரின் இசையில் ரதிமா பாடல்

ஆகஸ்ட் 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?