கியூபெக்கில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள Parti Québécois அரசாங்கம், Santé Québec என்ற சுகாதார நிர்வாக அமைப்பை முற்றாகக் கலைக்கும் தனது தேர்தல் கால நிலைப்பாட்டில் மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரசாரத்தின்போது, இந்த அமைப்பை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை Paul St-Pierre Plamondon தலைமையிலான கட்சி முன்வைத்திருந்தது.
ஆனால் இன்று 11ஆம் திகதி சுகாதார அமைச்சர் Marie-Karlynn Laflamme வெளியிட்ட கருத்தில், தற்போது Santé Québec அமைப்பை முற்றாகக் கலைப்பதற்குப் பதிலாக அதனை மாற்றியமைப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பு சில நல்ல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும், அதன் செயல்பாடுகளில் எவை சிறப்பாக உள்ளன, எவை மாற்றப்பட வேண்டும் என்பதை ஆராய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
