Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

36 ஆண்டுகளாக சொந்த மண்ணுக்காகப் போராடிய தாயார் மரணம் – நிறைவேறாத இறுதி ஆசை!

நவம்பர் 8, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

பலாலி மண்ணில் தம்மை குடியேற்றுமாறு போராடி வந்த தாயார் ஒருவர் தனது இறுதி ஆசை நிறைவேறாத நிலையில் இறைபாதம் அடைந்துள்ளார்.

கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த பலாலி மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
தனது மண்ணில் , சொந்த வீட்டிலையே தனது உயிர் போக வேண்டும். சொந்த வீட்டில் இறுதி கிரியைகள் நடைபெற வேண்டும் என்பதே தனது இறுதி ஆசை என கூறி வந்த, தாயாரான, தம்பித்துரை இளையகுட்டி என்பவர் தனது 83ஆவது வயதில்,  வயது மூப்பு காரணமாக  நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்
அந்த தாயாரின் இறுதி கிரியைகள் இன்றை தினம் ஞாயிற்றுக்கிழமை அவர்கள் தற்காலிகமாக வசித்து வரும் வீட்டில் நடைபெற்று , தகன கிரியைகளுக்காக பலாலி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
அதன் போது, தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 21ஆவது வாரமாக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு எடுத்து வரப்பட்டு , அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் , இன்றைய தீபாவளி தினமானது தமக்கு “கறுப்பு தீபாவளி” என பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்
எம்மை எமது சொந்த இடத்தில் மீள்குடியேற்றப்பட்ட பின்னரே எமது சொந்த வீட்டில் தான் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட முடியும். எமது நிலம் இழந்து , வீடிழந்துள்ள நிலையில் எம்மால் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட முடியாது என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்
யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமது காணிகளில் இருந்து வெளியேற்றப் பட்ட நிலையில் , யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்துள்ள போதிலும் , அந்த பகுதி மக்களின் காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து, இராணுவத்தினரின் சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில், அப்பகுதி மக்கள்  நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முந்தைய செய்தி கனடாவின் ஆறு தொகுதிகளில் இடைத்தேர்தல் – டிசம்பர் 7ஆம் திகதி வாக்குப்பதிவு!
அடுத்த செய்தி வங்கி ATM அருகில் இளைஞனை தாக்கி பணம் பறித்த போதை ஆசாமி கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

காணிப்பிணக்கில் ஒருவரை அடித்து கொலை – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை

பிப்ரவரி 20, 2026
இலங்கை

சிவில் திணைக்கள பண்ணையில் சட்ட விரோத குளம்!

டிசம்பர் 14, 2025
இலங்கை

க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியாவில் பாடசாலையின் உட்கட்டமைபை விருத்தி செய்ய நடவடிக்கை.

பிப்ரவரி 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முத்துஐயன்கட்டுக்குளம் தொடர்பில்-அரசாங்க அதிபர் – .உமாமகேஸ்வரன் அறிவிப்பு!

டிசம்பர் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?