யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தீபாவளிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
தீபாவளி தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (08.11.2026) யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் பரவலாக மழை பொழிந்தது.
இருந்தபோதிலும், மக்கள் மழையைப் பொருட்படுத்தாது ஆலய வழிபாடுகளிலும் தீபாவளிக் கொண்டாட்டங்களிலும் கலந்து கொண்டனர்.
குறிப்பாக, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தீபாவளியை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இதன்போது, பொதுமக்கள் மழையையும் பொருட்படுத்தாது திரளாக வருகை தந்து ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
