ஐக்கிய அரபு அமீரகத்தில் நவம்பர் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், இந்த விலைக் குறைப்பு வாகன சாரதிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இதன்படி, சூப்பர் 98 பெட்ரோல் லிட்டருக்கு 4.40 திர்ஹாமிலிருந்து 4.16 திர்ஹாமாகவும், Special 95 பெட்ரோல் 4.28 திர்ஹாமிலிருந்து 4.04 திர்ஹாமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், E-Plus 91 பெட்ரோல் 3.97 திர்ஹாமாகவும், டீசல் 4.75 திர்ஹாமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விலைகள் நவம்பர் முதலாம் திகதி முதல் அமீரகம் முழுவதும் நடைமுறைக்கு வருகின்றன.
