Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தியாக தீபத்தின் நினைவாலயம் சட்டவிரோதமானது – உடனடியாக அகற்றுமாறு மாநகர சபைக்கு பொலிஸார் கடிதம்

அக்டோபர் 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தின் அனுமதியின்றிய கட்டுமானங்களை உடனடியாக இடித்து அகற்றுமாறு யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மாநகர சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

நல்லூர் பின் வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த காணி நல்லூர் ஆலயத்திற்கு சொன்னதமானது. அதனை நீண்ட கால குத்தகை அடிப்படையில் மாநகர சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , குறித்த காணிக்குள் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலய கட்டுமானங்கள் மாநகர சபையின் உரிய அனுமதிகள் பெறப்படாமல், கட்டப்பட்டுள்ளதாக தாம் அறிவதாகவும் , குறித்த கட்டுமானத்தால் மக்கள் மனதில் யுத்த எண்ணங்கள் தோன்றும் என்பதுடன் , அது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் பாதிக்கும் என்பதனால், அதனை உடனடியாக இடித்து அகற்றுமாறு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மாநகர சபையினருக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

அதேவேளை , கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வில் , கண்ணாடி இழைகளால் தியாக தீபத்தின் சிலை உருவாக்கப்பட்டு, குறித்த நினைவாலயத்தில் அந்த சிலை வைக்கப்பட்டு, அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில் , நினைவேந்தல் நிகழ்வுகள் முடிவுற்று மறுநாள் காலை, யாழ்ப்பாண பொலிஸார் அந்த சிலையை அங்கிருந்து அகற்றி எடுத்து சென்று நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி தமிழக படகோட்டிக்கு 4 மில்லியன் ரூபா அபராதம்
அடுத்த செய்தி யாழில் இடம்பெற்ற தேசிய தூய்மை தின நிகழ்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்விளையாட்டு

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சன்ரைசர்ஸ் அணி …

ஏப்ரல் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் ஓரினச் சேர்க்கை திட்டங்களுக்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித் எச்சரிக்கை!

ஆகஸ்ட் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மலேசியாவில் போதைப்பொருளுடன் இலங்கையர் ஒருவர் கைது!

ஆகஸ்ட் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது

ஜனவரி 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?