Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

2029 வரை தொடரும் பழைய விதிமுறைகள்’ மத்திய அரசு எடுத்த தீர்மானம்!

அக்டோபர் 31, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கனடாவில் புதிய வாகனங்களுக்கான மாசு வெளியேற்றக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கும் திட்டத்தை 2029ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்க மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் மார்க் கார்னி மற்றும் ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் ஆகியோர் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, புதிய வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையின் அளவைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள், 2026ஆம் ஆண்டின் அளவிலேயே 2029ஆம் ஆண்டு வரை தொடரவுள்ளன.

முன்னதாக, 2027ஆம் ஆண்டு முதல் 2032ஆம் ஆண்டு வரையில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வாகன மாடல்களுக்கு கடுமையான மாசு வெளியேற்றக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

எனினும், தற்போது இந்தத் திட்டம் தொடர்பான ஆலோசனைகள் 2027ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடா மற்றும் அமெரிக்காவின் வாகன உற்பத்தித் தொழில்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக இணைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் புதிய வர்த்தக வரிகள் மற்றும் வாகன உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, கனேடிய வாகன உற்பத்தியாளர்களுக்கு மேலதிக கால அவகாசம் வழங்குவதே இந்த முடிவின் நோக்கம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தத் தீர்மானத்திற்குச் சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான கனடாவின் இலக்குகள் இந்தத் தாமதத்தால் பாதிக்கப்படலாம் என Clean Energy Canada அமைப்பின் பிரதிநிதி ஜோனா கிரியாசிஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, Bloc Québécois கட்சியின் சுற்றுச்சூழல் விவகாரப் பொறுப்பாளர் Patrick Bonin-உம் இந்த முடிவை விமர்சித்துள்ளார்.

மறுபுறம், கனேடிய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் Brian Kingston, அமெரிக்காவின் கொள்கை மாற்றங்களுக்கு ஏற்ப திட்டமிடுவதற்கு இந்தக் கால அவகாசம் உதவும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒத்திவைப்பினால் வாகன உற்பத்தியாளர்களுக்குத் தயாரிப்புப் பணிகளுக்குக் கூடுதல் கால அவகாசம் கிடைக்கவுள்ள அதேவேளை, மின்சார வாகனங்களின் சந்தை வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் கனடாவின் இலக்குகள் தொடர்பிலும் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.

கனடாவின் வாகன உற்பத்தித் துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மின்சார வாகனங்களின் எதிர்காலம் ஆகியவற்றில் இந்தத் தீர்மானம்  தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.

முந்தைய செய்தி கியூபெக்கில் மறுசுழற்சித் திட்டம் – பொதுமக்களுக்கான புதிய அறிவிப்பு
அடுத்த செய்தி தமிழக படகோட்டிக்கு 4 மில்லியன் ரூபா அபராதம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

பிரான்சில் குடும்ப பெண் கொலை;கணவன் கைது

செப்டம்பர் 21, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

சஷீந்திர ராஜபக்சவிற்கு பிணை நிராகரிப்பு!

ஆகஸ்ட் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

மே 17, 2026
அண்மைய செய்திகள்உலகம்

மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்.

ஜூன் 17, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?