Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க நகைகள் கொள்ளை

அக்டோபர் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டு வந்ததாகக் கூறப்படும் கணவன், மனைவியின் செயலால் பாதிக்கப்பட்ட 65 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கல்லாறு பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை விஜயலட்சுமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த அவரை மோட்டார் சைக்கிளில் வந்த கணவன், மனைவி இருவரும் அணுகியுள்ளனர்.

அவருடன் பேச்சுக்கொடுத்து, பாதுகாப்புக் காரணங்களைக் கூறி தங்க நகைகளைக் கழற்றிப் கைப்பையில் வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதன்போது, மயக்கத்தை ஏற்படுத்தும் மருந்து கலந்த பானமொன்றை அவருக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. அதனை அருந்திய சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, சுமார் 7 பவுண் தங்க ஆபரணங்களைத் திருடிக்கொண்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதுடன், சிறுநீரகப் பாதிப்பும் ஏற்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 29ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கடந்த மார்ச் மாதம் கொக்கட்டிச்சோலைப் பகுதியில் இடம்பெற்ற இளம் தாய் மற்றும் குழந்தை தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கணவன், மனைவியே இந்தக் கொள்ளைச் சம்பவத்துடனும் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், மயக்க மருந்து காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு மருத்துவ மற்றும் பொலிஸ் விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி சாட்டோகுவேயில் திடீரென மூடப்பட்ட மூத்த குடிமக்கள் மையம்!
அடுத்த செய்தி வலி. வடக்கில் 28ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வவுனியா சாலை சாரதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

பிப்ரவரி 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் ASKO கராத்தே கழகம் சர்வதேசப் போட்டியில் சாதனை!

அக்டோபர் 19, 2026
இலங்கை

யாழில் வன்முறையில் ஈடுபட்ட மேலும் மூவர் கைது.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தனியார் வகுப்பிற்கு சென்ற மாணவி தனியார் கல்வி நிலைய கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!Video இணைப்பு )

ஆகஸ்ட் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?