Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஆபத்தான நீர்நிலைகள் குறித்து அவதானம் தேவை: யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!

அக்டோபர் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கில் அண்மையில் பெய்த மழையினால் கிணறுகள், குளங்கள், வாய்க்கால்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் அதிகளவு நீர் தேங்கி நிற்பதால், ஆபத்தான நீர்நிலைகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவப் பிரிவில் பதிவாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் நீர்நிலைகளில் தவறுதலாக வீழ்ந்து இரு சிறுவர்கள் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 9 பேர் ஆண்கள், 6 பேர் பெண்கள் என்பதுடன், அவர்களின் வயது 6 முதல் 71 வரை காணப்படுகின்றது.

2025 இல் 8 உயிரிழப்புகளும், 2026 இல் 7 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

குறிப்பாக புங்குடுதீவு, காரைநகர் போன்ற பகுதிகளில் பாதுகாப்பற்ற திறந்த கிணறுகள் அதிகளவில் காணப்படுகின்றன.

மழைக்காலத்தில் அவை நீரால் நிரம்பும்போது ஆபத்தை எளிதில் அடையாளம் காண முடியாமல் போகலாம் என்பதால், பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் உடனடியாக பாதுகாப்பு வேலிகள், மூடிகள் மற்றும் எச்சரிக்கை அறிவிப்புகளைப் பொருத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏனைய பகுதிகளிலும் இத்தகைய ஆபத்தான நீர்நிலைகள் காணப்பட்டால், சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல உதவ வேண்டும்.

மேலும், பெற்றோர்கள் தமது பிள்ளைகளை நீர்நிலைகளுக்கு அருகில் தனியாகச் செல்ல அனுமதிக்காமல் கண்காணிக்க வேண்டும் என்றும், மதுபோதையில் உள்ளவர்கள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வைத்தியசாலை பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முந்தைய செய்தி வடக்கில் முதலீட்டாளர்களின் சிக்கல்களைக் குறைக்க முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
அடுத்த செய்தி யாழில் தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டம் சனிக்கிழமை முன்னெடுப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

.மன்னாரில் 18 வது நாளாக தொடரும் போராட்டம்!

ஆகஸ்ட் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் தீ விபத்து!

ஜூலை 24, 2025
இலங்கை

வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்.எம்.ஆலாம் கோரிக்கை

டிசம்பர் 12, 2025
இலங்கை

பாராளுமன்ற நிர்வாக பணிப்பாளராக மப்ருக் மர்சூக் தெரிவு!

செப்டம்பர் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?