ஐரோப்பிய நாடான பிரான்சில், புதிய போராட்டங்கள் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஆடம்பரப் பொருள் விற்பனைக் கடைகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியான சர்வதேச செய்தியிகளின்படி, கடந்த வார இறுதியில் சில பகுதிகளில் கடைகள் சூறையாடப்பட்டதைத் தொடர்ந்து, பல வணிக நிறுவனங்கள் தங்களது கடைகளின் கண்ணாடிச் சாளரங்களைப் பாதுகாப்புப் பலகைகளால் மூடியுள்ளன. சில கடைகள் கூடுதல் பாதுகாப்புப் பணியாளர்களையும் பணியில் அமர்த்தியுள்ளன.
இன்று நடைபெறவுள்ள புதிய போராட்டங்களின்போது மீண்டும் வன்முறை அல்லது சொத்துச் சேதங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
போராட்டங்களில் பங்கேற்பவர்கள் அமைதியான முறையில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

