Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா கோலாகலம் – மூத்த கலைஞர்களுக்கு “யாழ்முத்து” விருது

அக்டோபர் 24, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாண மாவட்டத்தின் தமிழர் பாரம்பரியத்தையும் கலை மரபுகளையும் பறைசாற்றும் வகையில், மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழர் பாரம்பரியக் கலை நிகழ்வுகள், நூல் வெளியீடு, கலைஞர்களுக்கான கௌரவிப்பு மற்றும் மாவட்ட மட்டக் கலைப் போட்டிகளில் வெற்றிபெற்ற கலை மன்றங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

விழாவின் ஆரம்பமாக, யாழ்ப்பாண மாவட்டச் செயலக நுழைவாயிலிலிருந்து தமிழ்ப் பண்பாட்டு ஊர்வலம் ஆரம்பமானது. பல்வேறு பாரம்பரியக் கலை நிகழ்வுகளுடன் முன்னெடுக்கப்பட்ட இந்த ஊர்வலம், மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தைச் சென்றடைந்தது.

தொடர்ந்து, நாடகச் சக்கரவர்த்தி பரஞ்சோதி பரராஜசிங்கம் எனப்படும் பாப்பா அவர்களின் கலைப்பணிகளை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட அரங்கில் நிகழ்வுகள் நடைபெற்றன.

தமிழ்த் தாய் வாழ்த்து, வரவேற்பு நடனம், கோலாட்டம் மற்றும் காலிங்க நர்த்தனம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பலாலி ஆசிரியர் கலாசாலையின் ஓய்வுநிலை அதிபரும், சாகித்திய ரத்னா விருது பெற்ற கவிஞருமான சோ. பத்மநாதன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.

இதன்போது, யாழ்ப்பாணத்தின் நாட்டார் வழக்காறுகளையும் சமூக அறிவியல் நோக்கிலான ஆய்வுகளையும் உள்ளடக்கிய “யாழ்ப்பாணம் – 05 நாட்டார் வழக்காறுகளும் சமூக அறிவியலும்” என்ற நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

நூலின் உள்ளடக்கம் மற்றும் ஆய்வுப் பெறுமதிகள் தொடர்பான ஆய்வுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கம் நிகழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து, பாரம்பரியக் கூத்திசைப் பாடல்கள், வீரம் குழுநடனம் மற்றும் கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மேலும், பிரதேச செயலக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட மூத்த கலைஞர்களுக்கு “யாழ்முத்து” விருதும், இளம் கலைஞர்களுக்கு “இளங்கலைஞர்” விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கலை மன்றங்களுக்கிடையில் நடைபெற்ற மாவட்ட மட்டப் போட்டிகளில் வெற்றிபெற்ற மன்றங்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கிராமியப் பாடல், இசை நாடகம், கும்மி நடனம், விழிப்புணர்வு வீதி நாடகம் மற்றும் கையெழுத்துச் சஞ்சிகை ஆகிய பிரிவுகளில் வெற்றிபெற்ற கலை மன்றங்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்டத்தின் ஓய்வுநிலைச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் கலந்துகொண்டார்.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் தர்சினி நிதர்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

அத்துடன், பலாலி ஆசிரியர் கலாசாலையின் ஓய்வுநிலை அதிபரும் சாகித்திய ரத்னா கவிஞருமான சோ. பத்மநாதன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஓய்வுநிலை சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் சுகுணலினி விஜயரத்தினம் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

தமிழர் பாரம்பரியக் கலைகளைப் பாதுகாத்தல், நாட்டார் வழக்காறுகளை ஆவணப்படுத்துதல் மற்றும் மூத்த, இளம் கலைஞர்களை ஊக்குவித்தல் ஆகியவற்றை முன்னிறுத்தி இந்தப் பண்பாட்டுப் பெருவிழா நடைபெற்றுள்ளது.

முந்தைய செய்தி மெக்கில் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு சர்ச்சை!
அடுத்த செய்தி கொக்குவில் இந்துக் கல்லூரிப் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

சந்தேகத்திற்கிடமான இரசாயனப் பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது!

செப்டம்பர் 21, 2025
இலங்கை

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக நிலையங்களுக்கு தண்டம்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பலாலியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஜூன் 15, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் புதிய அரசியல் அத்தியாயம்: PQ தலைமையில் சிறுபான்மை அரசு!

அக்டோபர் 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?