யாழ்ப்பாணத்தில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்து, அவரது தாயாரால் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தே தனது மகள் காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிட்ட தாய், மகள் காணாமல் போனமை தொடர்பாக கடந்த முதலாம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு 22 நாட்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை மகள் தொடர்பான எவ்விதத் தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என தாய் கவலை தெரிவித்துள்ளார்.
எனவே, பொலிஸார் துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து, காணாமல் போன தனது மகளைக் கண்டுபிடித்துத் தன்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

