Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில் இடம்பெறவுள்ள உதைபந்தாட்ட போட்டிகள் – 48 அணிகள் பங்கேற்பு

அக்டோபர் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள மாவட்ட உதைபந்தாட்ட போட்டிகளில் மாவட்டத்தை சேர்ந்த 06 உதைப்பந்தாட்ட சங்கங்களின் 48 அணிகள் பங்கேற்க உள்ளன

விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள யாழ்ப்பாண மாவட்ட உதைபந்தாட்ட சுற்றுத் தொடர் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

குறித்த போட்டித் தொடரை இவ்வாண்டுக்குள் நடத்தி முடிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைத் துரிதமாக முன்னெடுப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

வடமராட்சி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வலிகாமம், மருதங்கேணி மற்றும் தீவகம் ஆகிய ஆறு உதைபந்தாட்டச் சங்கங்களின் ஊடாக, நொக்-அவுட் முறையிலான போட்டிகளின் மூலம் தலா எட்டு கழகங்கள் தெரிவுசெய்யப்பட்டு, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இச் சுற்றுத் தொடரைச் சிறப்பாகவும் ஒழுங்குமுறையுடனும் நடத்துவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள், மைதான ஒழுங்குபடுத்தல்கள், போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் தெரிவு, போட்டி முறைமைகள், நடுவர் மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ப.ஜெயகரன், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், விளையாட்டுப் பிரிவு உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக விளையாட்டுப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் உதைபந்தாட்டச் சங்கங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி எம் மீது முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை – டக்ளஸ் தேவானந்தா
அடுத்த செய்தி மீனவர்களின் வாழ்க்கையை அவலமாக்கிய அரசாங்கம் – வசந்த முதலிகே குற்றச்சாட்டு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஆரம்பமாகும் கச்சதீவு திருவிழா

ஜனவரி 8, 2026
இலங்கை

நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்ட அறுவடை விழா!

பிப்ரவரி 3, 2025
இலங்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி தொடர்பில் வெளியான தகவல்!

டிசம்பர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?