Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஐந்து நாய்களை வளர்த்த உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்

அக்டோபர் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு – கோம்பாவில் பகுதியில், ஐந்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு விலங்கு விசர் நோய் தடுப்பூசி ஏற்றாமல் வளர்த்து வந்த நாய் உரிமையாளருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த நாய்கள் வீதியால் பயணிப்பவர்களை அச்சுறுத்துவதாகப் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்ததைத் தொடர்ந்து, கோம்பாவில் பொது சுகாதாரப் பரிசோதகர் விசாரணைகளை முன்னெடுத்து, நாய் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பதில் நீதிபதி நாய் உரிமையாளரைப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார். அத்துடன், அவரது வீட்டில் வளர்க்கப்படும் அனைத்து நாய்களுக்கும் விலங்கு விசர் நோய் தடுப்பூசி ஏற்றி, அதற்கான தடுப்பூசி அட்டைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, நாய்களுக்கான விலங்கு விசர் நோய் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. நாய் உரிமையாளர்கள் தமது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அல்லது பொது சுகாதாரப் பரிசோதகர்களைத் தொடர்புகொண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் கிராமம் கிராமமாகச் சென்று நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பையும் நாய்களின் நலனையும் கருத்திற்கொண்டு, வீடுகளில் நாய்களை வளர்ப்போர் உரிய தடுப்பூசிகளைத் தவறாமல் ஏற்றுவதுடன், அவற்றைப் பொறுப்புடன் பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி காங்கேசன்துறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மையாக்கல் செயற்றிட்டம் முன்னெடுப்பு
அடுத்த செய்தி யாழில் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பு – அமைச்சர் சந்திரசேகர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நெடுந்தீவு வைத்தியசாலைக்கு மின் பிறப்பாக்கி வழங்கி வைப்பு….

மே 13, 2025
இலங்கை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதான முன்னாள் வர்த்தக அமைச்சர்

பிப்ரவரி 24, 2026
அண்மைய செய்திகள்உலகம்

பாப்பரசரின் இறுதிச் சடங்கை அறிவித்த வத்திக்கான்…

ஏப்ரல் 22, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்….

மார்ச் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?