மத்திய மலைநாட்டு பகுதியில் சீரற்ற வானிலை நிலவுவதால் ஹட்டன் வட்டவளை பகுதியில் இன்று காலை 6.30 மணிக்கு விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஹட்டன் நோக்கி பயணித்த லொறியொன்றும், கொழும்பை நோக்கி பயணித்த ஜீப் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் லொறியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை வட்டவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
