முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியும், முன்னாள் முதற்பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிரிலிய சவிய அமைப்பின் வங்கிக் கணக்குடன் தொடர்புடைய நிதி முறைகேடு குறித்த விசாரணையில், அரச வங்கியிலிருந்து பெறப்பட்ட ஒரு கோடி ரூபாய் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில், ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
