வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் நலத்துக்கு மிகவும் நன்மை பயக்கும்.அதன்படி, வல்லாரைக் கீரையுடன் பால் கலந்து அரைத்து சாப்பிட வேண்டும்.இவ் விழுதை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து போகும்.
வல்லாரையுடன் மிளகு, துளசி இலை ஆகியவற்றை சமமாக எடுத்து அரைத்து, உருட்டி நிழலில் உலர்த்தி வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் காயச்சல் சரியாகும்.
உடலில் ஏற்படும் கட்டிகள், புண்கள் ஆகியவற்றை வல்லாரை சரி செய்யும்.
வல்லாரையில் காணப்படும் சுண்ணாம்புச் சத்து, தாது உப்புக்கள் ஆகியன இரத்தத்துக்கு தேவையான சத்துக்களை சரிவிகித அளவில் கொண்டுள்ளது.
கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினையான வெரிகோஸூக்கும் வல்லாரை சிறந்த நிவாரணியாக இருக்கும்.
நரம்பு மண்டலத்தை பலப்படுத்த வல்லாரை மிகவும் உதவும்.
வல்லாரைக் கீரையானது, மன அழுத்தத்தை தடுத்து நிறுத்தும். மேலும் உடலில் உள்ள நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி இதற்குண்டு.
இரத்தச் சுத்திகரிப்பு, தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல் நோய்கள், தோல் நோய்கள் ஆகியவற்றை சரி செய்யும்.
நாள்தோறும் 30 மில்லி அளவில் வல்லாரை ஜூஸ் குடித்து வந்தால் மாரடைப்பு அபாயம் குறையும்.
