Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

6 சிறுமிகளிற்கு பாலியல் துன்புறுத்தல் ஆஸ்திரேலியாவில் இலங்கையைச் மதத் தலைவருக்கு 13 ஆண்டுகள் சிறை!

அக்டோபர் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஆஸ்திரேலியாவின் Melbourne நகரில், இலங்கைப் பிறப்பைச் சேர்ந்த முன்னாள் புத்த பிக்குவொருவருக்கு, ஆறு சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் 13 ஆண்டுகள் 2 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

71 வயதான Naotunne Vijitha, Melbourne-ன் தென்கிழக்குப் பகுதியில் உள்ள Dhamma Sarana Buddhist Temple-இல் தலைமை பிக்குவாக பணியாற்றியவர்.

1994 முதல் 2002ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், Springvale மற்றும் Keysborough பகுதிகளில் இயங்கி வந்த கோயில்களில், அப்போது சிறுமிகளாக இருந்த ஆறு பேரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற விசாரணையில், சிறுமிகளுக்கு எதிரான 17 பாலியல் குற்றங்களில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதில் குழந்தை மீது பாலியல் ஊடுருவல் தொடர்பான 9 குற்றங்களும், குழந்தையுடன் அநாகரிகச் செயலில் ஈடுபட்ட 8 குற்றங்களும் அடங்குகின்றன.

இந்த வழக்கில், கோயிலுக்கு வந்த சிறுமிகளிடம் அவர் நம்பிக்கையை ஏற்படுத்தி, இனிப்புகள் மற்றும் chocolate போன்றவற்றைக் கொடுப்பதாகக் கூறி தனது தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தண்டனை வழங்கிய நீதிபதி Pardeep Tiwana, மதத் தலைவராக அவர் பெற்றிருந்த நம்பிக்கையை பயன்படுத்தி சிறுமிகளை துன்புறுத்தியது மிகவும் தீவிரமான நம்பிக்கைத் துரோகம் எனக் குறிப்பிட்டார்.

குற்றச்செயல்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றிருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்கள் பின்னர் காவல்துறையை அணுகியதைத் தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டது. Vijitha 2023ஆம் ஆண்டு குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்தார்.

அவர் விசாரணையின்போது குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார். ஆனால், கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற jury விசாரணையில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

தற்போது விதிக்கப்பட்டுள்ள 13 ஆண்டுகள் 2 மாத சிறைத்தண்டனையில், குறைந்தது 9 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறையில் இருந்த பின்னரே parole பெறுவதற்கான தகுதியை அவர் பெறுவார்.

மேலும், சிறைத்தண்டனை முடிந்த பின்னர் அவர் Australia-வில் இருந்து deportation செய்யப்படுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கனடாவுடனான வர்த்தகப் போரை நிறுத்த வேண்டும்: மைக் ரொஜர்ஸ் கோரிக்கை
அடுத்த செய்தி கியூபெக் Immigration-ல் அதிரடி மாற்றம்! தமிழர்களுக்கு என்ன பாதிப்பு?

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில் நிமோனியா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் – 29.01.2026

ஜனவரி 29, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இந்திய “கிராண்ட் மாஸ்டர்” ஆகாஷ் கணேசன் தலைமையில் யாழில் சதுரங்க பயிலரங்கு

ஆகஸ்ட் 19, 2026
இலங்கை

ஊடகவியலாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சாவகச்சேரி நகர பிதா

ஆகஸ்ட் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?